- · 1 friends
-

அப்பாவி கணவன்
மனைவியுடன் கணவன் தீபாவளிக்கு ஜவுளி வாங்க சென்றான்.
மனைவி சேலை வாங்க சென்றாள் எப்படியும் நான்கு முதல் அஞ்சு மணி நேரம் ஆகும் அதனால் அவன் ஜவுளி கடை வாசலில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மனைவியை நீ போய் வழக்கம் போல் உனக்கு பிடித்த புடவையை வாங்கிட்டு என்னை கூப்பிடு என்று சொன்னான்.
ஐந்து மணி நேரம் ஆனது ஒரு வழியாக மனைவி ஒரு புடவையை செல்கட் செய்துட்டு கணவனிடம் காட்டலாம் என்று வாசல் வந்து பார்த்தால் ஆளை காணவில்லை. அதிர்ச்சி ஆனவள் அங்கு இருந்த சீருடை அணிந்த செக்யூரிட்டி கிட்ட என் வீட்டுக்காரர் இங்க அமர்ந்து இருந்தாரே நீங்கள் பார்த்தீர்களா என்று கேட்க
அதற்கு அவர் , ஐயோ நான்தான் டி உன் புருசன் என்று சொல்ல. மனைவி என்னங்க இந்த கோளம் என்று கேட்க . அதற்கு கணவன் சொன்னான். காத்தால டியூட்டியில் இருந்தவர் கவலையுடன் இருந்தார் அவரிடம் என்னவென்று கேட்க, அவர் நைட் ஷிஃப்ட் பார்த்தாராம் அவரை ரிலீவ் பண்ணும் செக்யூரிட்டி வரலையாம், அவர் கட்டாயம் வீட்டுக்கு போகனும் என்று சொன்னார் அதான் அவருக்கு உதவி செய்தேன். எட்டு மணி நேரம் டியூட்டி பார்த்தால் 400₹ என்று கொடுத்துவிட்டு சென்றார். இன்னும் மூன்று மணி நேரம் பாக்கி இருக்கு, நீ இன்னும் ஒரு ரவுண்ட் போய்ட்டு வா என்று சொன்னார்.
மனைவிக்கு ரொம்ப மகிழ்ச்சி கணவரை பார்த்து சொன்னார், என் அப்பா உங்களை கல்யாணம் செய்யும்போது சொன்னார் நீங்க எள்ளுன்னா எண்ணெய்யா இருப்பீங்க என்று சொன்னார்.
நான் எடுத்த புடவைக்கு 400₹ குறைவா இருந்தது. இப்ப பாருங்க எனக்கு வேண்டிய காசை நீங்க எப்படி சம்பாதித்து விட்டீங்க. கொடுங்க என்று வாங்கிட்டு வேக வேகமா உள்ளே போனார்.