- · 1 friends
-

நாய் விலைக்கு வேண்டும்
கிராமத்தில் பண்ணையார் வீட்டில் இழவு.
ஒன்றல்ல ! ஒரே நேரத்தில் இரண்டு.
சாவு ஊர்வலம் மிக செலவுடன் சென்று கொண்டிருந்தது...
பக்கத்து ஊர் பண்ணையார் ஒரு வேலை நிமித்தம் அந்த ஊர் வர இறுதி ஊர்வளத்தை பார்த்து சற்றே குழப்பம் அடைந்தார்...
இரண்டு பிணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்ல .
பண்ணையார் ஒரு நாயை கையில் பிடித்து கொண்டு செல்ல, .....பின்னே வரிசையில் செல்வந்தர்கள் செல்ல....
நேராக பண்ணையாரிடம் சென்ற அவர் என்ன செய்தி என்று கேட்க...
அவரோ ! ஒண்ணும் இல்லை! இந்த நாய் என் மனைவியை கோபத்தில் கடித்து குதறி விட்டது..
காப்பாற்ற சென்ற என் மாமியாரையும் கடித்து குதறி விட்டது ! ரெண்டு பேரும் ஸ்பாட் அவுட்...
அதான் அவங்க இறுதி ஊர்வலம் போய் கொண்டு இருக்கோம்!
என்று சொன்னவுடன்.
பக்கத்து ஊர் பண்ணையார்........
ஐயா ! எத்தனை லட்சம் வேண்டும் என்றாலும் தரேன்! அந்த நாயை என்னிடம் கொடுங்க என்று கேட்க!.
அதற்கு அந்த பண்ணையார் வரிசையில் நிற்கும் எல்லாரும் பண்ணையார்கள் தான் !
போய் நீங்களும் வரிசையில் நில்லுங்க!