·   ·  52 posts
  •  ·  0 friends

பங்கு சந்தை என்றால் என்ன எளிதாக விளங்க ஒரு கதை

ஒரு ஊருக்கு வியாபாரி வந்தான். ஊரில் இருக்கும் குரங்கை பிடித்து கொடுத்தால் 100₹ தருவதாக சொல்ல, பலர் சிரித்தனர். சிலர் குரங்கை பிடித்து கொடுத்து வியாபாரியிடம் இருந்து 100₹ வாங்கினர்.

சில நாள் கழித்து அதே வியாபாரி குரங்குக்கு 200₹ கொடுப்பதாக சொல்ல, இப்போ மக்கள் விழித்து கொள்ள ஊரில் இருக்கும் மிச்ச சொச்ச குரங்குகளை பிடித்து கொடுத்து காசை வாங்கினார்கள்.

ஒரு வாரம் ஓடியது! இப்போ மக்களிடம் வந்து ஒரு குரங்குக்கு 500₹ தருகிறேன் என்று சொல்ல! இப்ப மக்கள் மீதி இருந்த ஒன்று இரண்டு குரங்கை தேடி பிடிக்க ஆரம்பித்தனர்.

அப்போ வியாபாரி, வாங்கிய குரங்கை பராமரிக்க தன் வேலை ஆளை அமர்த்தி விட்டு வெளியூர் செல்வதாக சொல்லி விட்டு சென்றான். போகும் போது மக்களிடம் திரும்பி வரும்போது ஒரு குரங்குக்கு 1000₹ தருவதாக சொல்லி விட்டு செல்ல.....

இப்போ மக்கள் ஊரில் குரங்கு இல்லையே என்ன செய்வது என்று தவிக்க! அப்பொழுது வியாபாரியின் வேலையாள் மக்களுக்கு ஒரு யோசனை சொன்னான் அதாவது அவனிடம் இருக்கும் குரங்கை 700₹ விற்பதாக சொல்ல! மக்களும் சரி நமக்கு 300₹ இலாபம் தானே என்று அவனிடம் இருந்த எல்லா குரங்குகளை வாங்கி வியாபாரிக்காக காத்து இருந்தனர்.

இரண்டு வாரம் ஓடியது! வியாபாரி ஊருக்கு வரவே இல்லை! சரி அந்த வேலையாள் எங்கே என்று பார்க்க போனால் அவன் ஊரை காலி செய்து போய் ஒரு வாரம் ஆச்சு!

இவ்வளவு தாங்க பங்கு வர்த்தகம்..............

  • 14
  • More
Comments (0)
Login or Join to comment.