- · 1 friends
-

இன்றைய ராசி பலன்கள் - 21.6.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மறைமுகமான சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்காலம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சேமிப்பு விஷயங்களில் சில முடிவுகளை எடுப்பீர்கள். கலைத்துறைகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
ரிஷபம்
உத்தியோகப் பணிகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். நெருக்கமானவர்களின் மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேள்விப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் போட்டிகள் மேம்படும். வாகனப் பழுதுகளைச் சீர் செய்வீர்கள். தடைகள் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். முயற்சிக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் சாதகமாகும். மேல்நிலைக் கல்வியில் தெளிவு ஏற்படும். வாடிக்கையாளர்களின் ரசனைகளைப் புரிந்து கொள்வீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கடகம்
குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான எண்ணங்கள் அதிகரிக்கும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தடைப்பட்ட சில பணிகளை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன ம்
சிம்மம்
வாழ்க்கை துணைவர் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சக ஊழியர்களின் எண்ணங்களைப் புரிந்து செயல்படுவீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் அமையும். தந்தைவழிச் சொத்துக்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
உடன்பிறந்தவர்களால் மனதளவில் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில வருமான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களால் அலைச்சல் உண்டாகும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். பயனற்ற பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். வர்த்தகப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். சிக்கல் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்துச் செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். பொன், பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பக்தி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
விருச்சிகம்
பிரச்சனைகளுக்குத் தீர்வு உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகனப் பயணத்தில் விவேகம் வேண்டும். ஆரோக்கியம் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் மாற்றம் உண்டாகும். தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்ப்பது மன அமைதியைக் கொடுக்கும். கால்நடைப் பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். எதிர்ப்புகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் விவேகத்துடன் செயல்படவும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஆரஞ்சு
மகரம்
முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு ஏற்படும். உடல்நலத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில விஷயங்கள் தாமதங்களுக்குப் பின்பு நடைபெறும். சக ஊழியர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீலம்
கும்பம்
பதற்றமின்றிச் செயல்படுவது உங்களின் மீதான தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சிறுதூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் நுட்பமாகச் செயல்பட்டுப் பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். வியாபாரப் போட்டிகளை வெற்றிகொள்வீர்கள். ஆதாயகரமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மீனம்
எதிலும் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளில் தாமதம் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான தீர்ப்பு ஏற்படும். உறவுகள் பக்கபலமாகச் செயல்படுவார்கள். தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் மூலம் ஆதாயத்தை மேம்படுத்துவீர்கள். நம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை