·   ·  156 posts
  •  ·  1 friends
  • 1 followers

கள்ள ஆட்டம்

அது ஒரு சாப்பாடு போட்டி!

பத்து மாடி! ஒவ்வொரு மாடியிலும் இலை போட்டு சாப்பாடு பரிமாறி தயாராக வைத்திருப்பார்கள்!ஒரு மாடியில் சாப்பிட்டு முடித்த பின் அங்கு ஒரு பணியாளன் இருப்பான் சாப்பிட்டதற்கு அடையாளமாக ஒரு கல்லை மேலே இருந்து கீழே போடுவான் அப்படி என்றால் அவன் முழு சாப்பட்டையும் சாப்பிட்டு விட்டான் என்று அர்த்தம்.

போட்டி ஆரம்பித்தது!

முதலில் ஆப்ரிக்கா நாட்டுக்காரன் சென்றான் முதல் மாடி சாப்பாட்டை முடித்து, இரண்டாவது மாடி சாப்பாட்டை சாப்பிட்டான் பணியாள் கல்லை வெளியே போட்டான்! மூன்றாவது மாடி சாப்பாட்டை அவனால் சாப்பிட முடிய வில்லை! தோற்று வெளியே சென்றான்!

அடுத்து இங்கிலாந்து நாட்டுக்காரன் சென்றான் நான்கு மாடி சாப்பாட்டை முடித்து, பணியாள் கல்லை வெளியே போட்டான்! ஐந்தாவது மாடி சாப்பாட்டை அவனால் சாப்பிட முடிய வில்லை! தோற்று வெளியே சென்றான்!

அடுத்து நம்ம ஆளு சென்றான் ஒன்பது மாடி சாப்பாட்டை சாப்பிட்டான்! இன்னும் ஒரு மாடி சாப்பாடு தான் பாக்கி! பத்தாவது மாடியில் இருக்கும் பணியாளுக்கு நம்ம ஆளு ஜெயிக்க போகிறான் என்று தகவல் வந்தது ஆவல் மிகுதியில் நம்ம ஆளு வருவதற்குள் தன்னிடம் உள்ள அந்த கல்லை தூக்கி போட்டான்.

இப்ப நம்ம ஆளு பத்தாவது மாடியில் இருக்கும் சாப்பாட்டை சாப்பிட்டான். சாப்பிட்ட பிறகு கல் எங்கே என்று கேட்க!

அவனோ நீ எப்படியும் ஜெயித்து விடுவாய் என்று தெரியும் அதனால் நீ வருவதற்கு முன்பே கீழே போட்டு விட்டேன் என்று சொல்ல !

நம்ம ஆளுக்கு கோபம் வந்தது. இது கள்ளாட்டம் இதை நான் ஏற்று கொள்ள முடியாது ! நான் மறுபடியும் முதல் மாடியில் இருந்து சாப்பிடுறேன் என்றான்.

  • 26
  • More
Comments (0)
Login or Join to comment.