- · 1 friends
-

தாய்மையின் மகத்துவம் (உண்மைச்சம்பவம்)
குஜராத்தில் ஒருவர் பசு வாங்கி தொழுவத்தில் கட்டி இருந்தார்! மாட்டின் பாதுகாப்பிற்காக சி சி டி வி வைத்து இருந்தார்.
இரவு என்ன நடக்கிறது என்று பார்த்த அவருக்கு பெரிய ஆச்சரியம்!
தினமும் ஒரு சிறுத்தை பசுவை பார்க்க வந்து அதன் அருகில் இரவு முழுவதும் அமர்ந்து பின் அதிகாலை சென்று விடுவது வழக்கமாக இருந்தது.
என்ன விசயம் என்று தெரிந்து கொள்ள பசு வாங்கிய நபரிடம் கேட்க!
அவர் சொன்னது! முன்பு கிராமத்தில் இருப்பவர்கள் சேர்ந்து சிறுத்தையை கொன்று விட்டனர். அதற்கு ஒரு 20 நாள் குட்டி ஒன்று இருந்தது. அது இந்த பசுவிடம் தான் பால் குடித்து வளர்ந்தது. பின் வளர்ந்ததும் அதை காட்டில் கொண்டு போய் விட்டு விட்டார்கள்!
ஆனாலும் அது தனக்கு பால் கொடுத்த பசுவை தாயகவே ஏற்று கொண்டு விட்டது!
தினம் வந்து தாய் பசுவுடன் இருக்க தொடங்கி விட்டது!