·   ·  194 posts
  •  ·  1 friends
  • 1 followers

திரிந்துப் போன பழமொழிகளும் அதன் அர்த்தங்களும்

1. "கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"

சரியான பழமொழி :

"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".

விளக்கம் :

இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது.

கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள்.

இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது.

2. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு.

சரியான பழமொழி :

ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - .

3. படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு.

சரியான பழமொழி :

படிச்சவன் பாட்டைக் கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டைக் கொடுத்தான்

4. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - தவறு.

சரியான பழமொழி :

ஆயிரம் வேரைக் (மூலிகை வேரை ) கொன்றவன் அரை வைத்தியன் -

5. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - .தவறு.

சரியான பழமொழி :

நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு -

( சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு... அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது... ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். )

6. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் -தவறு.

சரியான பழமொழி :

அர்ப்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். -

நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்.

மாறுவோம்...பிறரை மாற்றுவோம்.

  • 239
  • More
Comments (0)
Login or Join to comment.