·   ·  156 posts
  •  ·  1 friends
  • 1 followers

உலகத்திலேயே அதிகமான விலைகொண்ட திரவப் பதார்த்தம் எது?

நாம் முற்றிலும் எதிர்பார்க்காத ஒன்று இது..

தேளின் விடம் என்பதுதான் பதில்

ஒரு கலன்(6 போத்தல்கள் அளவு) விடத்தின் விலை 39 மில்லியன் டொலர் என்கிறார்கள். நம்ப முடியவில்லைதான். ஆனால் உண்மை…

25இனங்களில் மாத்திரமே விடம் இருக்கின்றது. இவற்றுள் பெரும்பான்மையானவை Buthidae என்ற இனத்திலேயே காணப்படுகின்றது. நாள்பட்ட வலிக்கு (Chronic pain) தேளின் விடம் நல்ல ஔடதம் என்கிறார்கள்

குறிப்பாக deathstalker எனப்படும் இனம் மிகமிக ஆபத்தானது. இந்த இனத் தேளின் விலைதான், சந்தையில் “ஆனைவிலை குதிரை விலையாக” இருக்கின்றது. ஒரு கலன் விடத்தின் விலை 39 மில்லியன் டொலர் என்று மதிப்பிட்டாலும், ஒரு கலன் விடத்தை வாங்குவது என்பது சுலபமான ஒன்றல்ல. ஒரு தேளிடமிருந்து 2.64 மில்லியன் தடவைகள் “கறந்தால்தான்” ஒரு கலன் விடத்தை திரட்ட முடியும்.

ஒரு துகள் சீனியை விட சிறிதான அளவு விடத்தின் விலை 130டொலர்கள் என்கிறார்கள். கைளால்தான் இதனின் விடத்தை எடுக்க முடியும். இது மிகச் சிரமமான காரியம் என்பதால்தான். இதன் விடத்தின் விலை “தலைக்கேறி” இருக்கின்றது. ஒரே தடவையில் 2.மி.கி அளவுக்கு மேல் ஒரு தேளிடமிருந்து விடத்தை எடுக்க முடியாது என்று சொல்லப்படுகின்றது.

  • 22
  • More
Comments (0)
Login or Join to comment.