- · 1 friends
-

மனிடோபாவில் மீண்டும் அவசர நிலை அறிவிப்பு
கனடாவின் மனிடோபா மாகாணத்தில் நிலவும் தீவிர காட்டுத்தீ பரவல் காரணமாக மீண்டும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு வாழும் மக்கள் உயிர் பாதுகாப்பிற்காக இடம் மாற்றப்பட வேண்டிய சூழ்நிலையால், மாகாணத்தில் இரண்டாவது அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர நிலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதாக முதல்வர் வாப் கின்யூ தெரிவித்தார்.
பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் அவர்களுக்கான தற்காலிக தங்குமிடங்களை விரிவுபடுத்த வேண்டியுள்ளது எனவும் கின்யூ கூறியுள்ளார்.
கடந்த முறையைப் போலவே, லீலா சாக்கர் மையம் மற்றும் பில்லி மோசியென்கோ அரீனாவும் மறுபடியும் மக்கள் தங்குவதற்காக திறக்கப்படுகின்றன. மேலும், வினிப்பெக் நகர மத்தியிலுள்ள RBC கண்வென்ஷன் மையமும் விரைவில் பயன்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.