·   ·  44 news
  •  ·  1 friends
  • 1 followers

கனடாவில் இரு விமானங்கள் மோதி இருவர் உயிரிழப்பு

கனடாவில் விமான பயிற்சியின் போது, இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

மனிடோபா (Manitoba) - ஸ்டெயின்பாக் (Steinbach) பகுதியில், விமானம் ஓட்டும் பயிற்சி மையம் ஒன்றில், குறித்த இருவரும் தனித்தனியாக விமானத்தை இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வின்னிபெக்கில் (Winnipeg) இருந்து 60 கிலோமீற்றர் தூரத்தில், தெற்கு விமான நிலையம் அருகே இருவரும் விமானத்தைத் தரையிறக்க முயன்றவேளை, 400 மீற்றர் உயரத்தில் இருவரின் விமானங்களும் மோதி விபத்துக்குள்ளாகின. விபத்துக்குள்ளான விமானங்கள் தீப்பிடித்ததில், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில், கனடா போக்குவரத்து பாதுகாப்புச் சபை விசாரணைகளை நடத்தி வருவதாக, கூறப்படுகின்றது.

  • 345
  • More
Comments (0)
Login or Join to comment.