·   ·  40 news
  •  ·  1 friends
  • 1 followers

தப்பிச் சென்ற கைதி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கனடாவில் தப்பிச் சென்ற கைதி ஒருவருக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1992-ஆம் ஆண்டு கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி ஒருவர் இவ்வாறு தப்பியுள்ளார்.

கியூபெக்கிலுள்ள ஆர்செம்பெல்ட் Archambault சிறையிலிருந்து தப்பியதைத் தொடர்ந்து, அவரை பிடிக்க நாடு தழுவிய அளவில் பிடிவிராந்து உத்தரவு (Canada-wide warrant) பிறப்பிக்கப்பட்டுள்ளது. லோரீ பில் ஜெர்மா (Lory Bill Germa) என்ற 69 வயதான கைதியே இந்த தப்பிச் சென்றுள்ளார். அவர் தற்போது ஒண்டாரியோ மாகாணத்தின் தென் பகுதியில் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 5 அடி 8 அங்குலம் உயரமான நபர் சுமார் 165 பவுண்ட் எடையுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்கள், இந்த நபரை காணும்போது அருகில் செல்ல வேண்டாம், அல்லது அவரிடம் நேரடியாக பேச்சு கொடுக்கவேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.உடனடியாக 911-ஐ அழைத்து தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நபர் கொலைக்குற்றவாளி என்பதால், மிகவும் ஆபத்தானவர் என்றும், பொதுமக்கள் அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

  • 478
  • More
Comments (0)
Login or Join to comment.