·   ·  55 news
  •  ·  1 friends
  • 1 followers

பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு சம்பவம்

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் ஒரு காரில் பயணம் செய்த நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சர்ரே காவல்துறை சேவையின் செய்திக் குறிப்பின்படி, 84வது அவென்யூவின் கிழக்கு வழித்தடத்தில் 140வது தெருவை நெருங்கி வந்தபோது, காரில் பயணித்த நால்வருக்கு அருகில் வந்த வெள்ளை டெஸ்லா காரில் இருந்த மூவர் துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த டெஸ்லா காரின் எண் பலகை ஒண்டாரியோ மாநிலத்தைச் சேர்ந்தது எனவும் அதுவும் தெரியாத வகையில் இருந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு சந்தேகநபர்கள் அந்த பகுதியில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்த மூவரும் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலுக்கான காரணம் தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது.

  • 904
  • More
Comments (0)
Login or Join to comment.