·   ·  44 news
  •  ·  1 friends
  • 1 followers

அமெரிக்கா பயணத்தை தவிர்க்கும் கனடியர்கள்

 அமெரிக்காவிற்கான பயணங்களை கனடியர்கள் தொடர்ந்தும் தவிர்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்குப் பயணிக்க கனடியர்கள் அதிக ஆர்வம் காட்டாமல் உள்ளனர். அதே நேரத்தில் நாடளாவிய உள்நாட்டு சுற்றுலா திடீரென உயர்வடைந்து வருகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வேளையில், பரபரப்பான கோடை விடுமுறை காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பயணத்துறையில் செயல்படும் நிறுவனங்களின் தகவலின்படி, உள்ளூர் இடங்களுக்கு முன்பதிவுகள் அதிகரித்து, கனடாவில் உள்ள தனித்துவமான சுற்றுலா தலங்களை ஆராய்வதில் மக்கள் அதிகம் ஈடுபடுகிறார்கள்.

இந்த ஆண்டில் கனடியர்கள் அதிக அளவில் உள்ளூர் பயணங்களில் ஈடுபடுகிறார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பயண மாற்றங்கள் அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்களால் ஏற்படுகிறதா என்பது தெளிவில்லை. இருப்பினும், இந்த மாற்றங்கள் கனடிய உள்ளூர் பொருளாதாரத்திற்கு நன்மை தரும் என பயண நிறுவங்கள் நம்புகின்றன.

  • 874
  • More
Comments (0)
Login or Join to comment.