·   ·  38 news
  •  ·  1 friends
  • 1 followers

பாட்டு பாடி ஆட்டம் போட்ட விஜய் மல்லையா - லலித் மோடி

முன்னாள் ஐபிஎல் உரிமையாளர் லலித் மோடி ஏற்பாடு செய்திருந்த விருந்தில், தொழிலதிபர் விஜய் மல்லையா கலந்துகொண்டு பாட்டு பாடி டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

லலித் மோடி மீது சட்டவிரோத ஏல முறைகேடுகள், பணமோசடி, மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோல், விஜய் மல்லையா ₹9,000 கோடிக்கும் மேல் வங்கிக் கடன் தவணையை செலுத்தாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இருவரும் 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில் லண்டனில் உள்ள தனது வீட்டில் நடந்த பிரம்மாண்டமான விருந்து குறித்த வீடியோவை லலித் மோடி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த விருந்தில் இந்தியப் பாடகர் கார்ல்டன் பிரகன்சா மற்றும் முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், விஜய் மல்லையா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

  • 255
  • More
Comments (0)
Login or Join to comment.