·   ·  46 news
  •  ·  1 friends
  • 1 followers

டொரண்டோ எல்லைப்பகுதியில் மர்ம மரணம்

 டொரண்டோவின் பிக்கரிங் எல்லைப் பகுதியில் அடையாளம் காணப்படாத சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைவே 401 மற்றும் வைட்ஸ் ரோட் பகுதியில் உள்ள இடத்திற்கு இரவு 12:06 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், அங்கு ஒருவரது உடலை மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மரணத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் இருந்ததால், தற்போது இது கொலை விசாரணையாக மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மரணமடைந்தவரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை

  • 500
  • More
Comments (0)
Login or Join to comment.