·   ·  44 news
  •  ·  1 friends
  • 1 followers

போலி குடிவரவு சேவை வழங்கிய பெண் கைது

கனடாவில் குடியுரிமை மற்றும் வேலை அனுமதிக்காக விண்ணப்பிக்க விரும்பிய பலரிடம் பொய்யான குடிவரவு சேவைகளை வழங்கியதாக குற்றம் சும்தி 43 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2023 மே 31 முதல் 2025 மே 31 வரையான காலப்பகுதியில் யோங் வீதி மற்றும் எக்லிங்டன் அவென்யூ பகுதிகளில் குற்றவாளி குடிவரவு ஆலோசனைகள் வழங்கியதாக கூறப்படுகிறது.

மக்கள் குறித்த பெண்ணிடம் பணம் செலுத்திய பின், அரசாங்க ஆவணங்கள் போல உருவாக்கப்பட்ட பொய்யான ஆவணங்கள் வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த ஆவணங்கள் திகதிகள் தவறானவையாக இருப்பதும், வழங்கப்பட்ட சேவைகள் சட்டபூர்வமானவை அல்ல என்பதும் பாதிக்கப்பட்டவர்களால் உணரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாரியா கொர்புஸ் என்ற 43 பெண் மீது போலி ஆவணத் தயாரிப்பு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த பெண் தொடர்பில் மேலும் தகவல்கள் தெரிந்தால், டொராண்டோ பொலிசாரை 416-808-5300 என்ற எண்ணிலும், அல்லது அநாமேதய முறையில் தகவல் அளிக்க விரும்பும்வர்கள் Crime Stoppers-ஐ 416-222-TIPS (8477) என்ற எண்ணிலும் தொடர்புகொள்ள முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

  • 350
  • More
Comments (0)
Login or Join to comment.