• 11
  • More
 ·   ·  4 jokes
  •  ·  0 friends

கணவனின் வேலைக்கேற்ப மனைவிகளின் கோபம்

பைலட் மனைவி: ரொம்ப ஒசரத்தில பறக்கிறதா நெனப்போ..

வாத்தியாரின் மனைவி: எந்தலையெழுத்து ஒங்களுக்கு பாடம் எடுத்தே நான் ஓய்ஞ்சி போயிட்டேன்..

நடிகனின் மனைவி: ஒங்க நடிப்பையெல்லாம் வேற யார்கிட்டயாவது காமிங்க எங்கிட்ட வேண்டாம்...

மின்சார வாரியத்தில் வேலைசெய்யும் கணவனின் மனைவி: ரொம்ப பண்ணுனீங்க அப்புறம் பீஸ புடுங்கி விட்ருவேன் ஆமா ...

ஆடிட்டர் மனைவி: எல்லாம் ஞாபகம் வச்சிருக்கேன் ஒருநாள் ஒன்னோட கணக்க தீக்குறனா இல்லையா பார்...

டிசைனரின் மனைவி: மூஞ்சில எம் பீச்சாங்கைய வெச்சேன்னு வையி மூஞ்சி ஷேப்பு மாறிடும் ஆமா..

வெட்னரி டாக்டரின் மனைவி: மாடு மாறி மசமசனு நிக்காம போயி வேலய பாருங்க ...

எஞ்சினியர் மனைவி: எல்லா பார்ட்ஸ்சையும் உறுவிப்புடுவேன் உறுவி ஆமா ...

பல் டாக்டர் மனைவி: ஒண்ணு விட்டேன் வையி பல்லு பூராம் தெறிச்சிபுடும் ஆமா...

போலிஸ்காரரின் மனைவி: ரெண்டு போட்டேன்னு வையி எலும்பு ஓடஞ்சி மூலையில தான் கெடக்கணும் ...

வக்கீலின் மனைவி: இந்த பாரு உன்னோட புளுகு மூட்டையெல்லாம் கோர்ட்டுல வெச்சிக்க எங்கிட்ட வேண்டாம் ...

வேலை இல்லாதவனின் மனைவி: சும்மா வடிச்சி வடிச்சி கொட்ட முடியாது எங்கயாவது போயி ரோடு மேய வேண்டியது தான...

Comments (0)
Login or Join to comment.