Added a post
திருப்பதி அருகிலுள்ள மங்காபுரம் கிராமத்தில் ஒரு மூதாட்டி இருந்தாள். அவளது பெயர் கங்கம்மா. சுண்டல் விற்பது அவளுக்குத் தொழில். அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தினாள். கணவர் போய்விட்டார். பிள்ளைகளும் இல்லை."ஏண்டா பிறந்தோம்" என்று அடிக்கடி புலம்புவாள். அந்தக் காலத்தில், காட்டுப்பாதையில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்துதான் திருமலைக்குச் செல்வார்கள். அப்படி ஒருநாள் பக்தர்கள் கூட்டம் அதிகாலைப் பொழுதில் மலையேறிக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தை மலை அடிவாரத்தில் கண்ட பாட்டி, மலையேறுபவர்களிடம் சென்று, "ஐயா! நீங்க எல்லாரும் மலைக்கு எதற்காகச் செல்கிறீர்கள்?'' என்று ஒன்றும் அறியாதவளாய்க் கேட்டாள்.அவளுடையஅப்பாவித்தனமான கேள்வியைக் கேட்டதும் அவர்கள் சிரித்து விட்டனர். "என்ன பாட்டி இது கேள்வி? திருமலையின் அடிவாரத்தில் இப்படியும் ஒருத்தி இருக்கியே! மேலே பெருமாள் கோயில் இருப்பது திருப்பதிகாரியான உனக்கே தெரியாதா?'' என்று கோபித்துக் கொண்டனர்.உண்மையில், மலையில் கோயில் இருப்பதைக் கூட அறியாமல் இருந்தாள் அவள். ஒரு பக்தர் மட்டும் அவள் மீது இரக்கம் கொண்டு, "அம்மா! மலை மேல் ஒரு சுவாமி இருக்கிறார். அவனைப் போய் தரிசித்தால் இனிமேல் இப்படி பிறந்து சுண்டல் விற்கும் நிலை இருக்காது. அவனை "கோவிந்தா" எனச் சொல்லி கும்பிட வேண்டும். அப்படி செய்தால் நீ செய்த பாவங்களெல்லாம் தீர்ந்து விடும்,'' என்று அவளுக்குப் புரியும் வகையில் எளிமையாக எடுத்துச் சொன்னார்.இதைக் கேட்டாளோ இல்லையோ! சுண்டல் கூடையோடு திருமலைக்கு ஏறினாள். ஏழுமலையப்பனைக் கண்குளிரக் கண்டாள். "அப்பனே! கோவிந்தா, உன்னை வணங்கினால் இனி பிறக்கவே மாட்டேனாமே! அந்த பக்தர் சொன்னாரே! எனக்கும் இனி பிறவி வேண்டாமையா'' என்று மனம் உருகிச் சொன்னாள். தரிசிக்க வந்த பக்தர்கள் மலையை விட்டுக் கிளம்பினார்கள்.அவள் மட்டும் அங்கேயே தங்கிவிட்டாள். அப்போது, ஒரு வயோதிகர் அங்கு வந்தார். "அம்மா! சுண்டல் கொடு'' என்று கேட்டார். அவளும் கொடுக்க, சாப்பிட்டு விட்டு நடையைக் கட்டினார்."ஐயா! சுண்டலுக்கு காசு கொடுத்துட்டு போங்க,'' என்றாள் பாட்டி."அம்மா! நான் ஒரு கடன்காரன், கல்யாணத்துக்குக் கடன் வாங்கிவிட்டு, வருமானத்தையெல்லாம் வட்டியாகக் கட்டிவிட்டு கஷ்டப்படுகிறேன். சுண்டலுக்கு கூட பணமில்லை. நாளை இங்கே வருவேன். அப்போது காசு தருகிறேனே!'' என்றார் கெஞ்சலாக."சரி, நாளை கொண்டு வாங்க,'' என விட்டுவிட்டாள் மூதாட்டி. தன் முன்னால் வந்து நின்றது உலகிற்கே படியளக்கும் ஏழுமலையான் என்பதைப் பாமரப் பெண்ணான கங்கம்மா எப்படி அறிவாள்!மறுநாள், சொன்னபடி அந்த வயோதிகர் வரவில்லை. "இப்படி ஏமாற்றி விட்டாரே கிழவர்" என அவள் பொருமிக் கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் அவள் இறந்தும் போய்விட்டாள்.பாட்டிக்கு பணத்துக்கு பதிலாக, மேலான வைகுண்டத்தையே கொடுத்து விட்டார் பரந்தாமன். ஆனாலும், அவர் மானிடப்பிறப்பெடுத்து சீனிவாசனாக பூமிக்கு வந்தவர் இல்லையா!பாட்டிக்கு மறுநாள் காசு கொடுப்பதாக வாக்களித்து விட்டு, கொடுக்கவில்லையே!இதனால் தெற்குமாடவீதியிலுள்ள அசுவ சாலையில், இப்போதும் விழாக்காலங்களில் அவர் பவனியாக வரும் போது, பாட்டிக்கு பயந்து கொண்டு மேளதாளம் இல்லாமல் ஒளிந்து கொண்டு செல்கிறார். இந்த கதையைப் படித்தவர்களெல்லாம், தீர்க்காயுளுடன் வாழ்ந்து, பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்.
Added article
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பல்வேறு கோவில்களுக்கு ஒன்றாக சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இன்று அவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதற்காக நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு காலை 11.40 மணிக்கு வந்தனர். அப்போது விமான நிலையத்தில் இருந்த ஊழியர்கள் உள்பட பலரும் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் லால்குடி அருகே உள்ள விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலில் வழிபாடு நடத்தினர்.
Added a news
பிரதமர் அலுவலகத்தின் செலவுகளை 50 சதவீதத்தால் குறைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்த நிலையில், அது தனக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ள பிரதமர், அலரிமாளிகையில் வசிப்பதில்லை என தீர்மானித்துள்ளார். கொழும்பு பிளவர் வீதியில் உள்ள தனது தனிப்பட்ட இல்லத்தில் தங்கியிருந்து பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி ஆட்சிக் காலத்தில் கூட அலரிமாளிகையில் தங்கியிருக்கவில்லை எனவும், உத்தியோகபூர்வ தேவைகளுக்காக மாத்திரம் அலரிமாளிகையை பயன்படுத்தியதாகவும் பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Added a news
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ஜகத் அல்விஸ் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார்.இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் சுமார் ஒன்பது மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுகடந்த 9ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவரிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Added a news
அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவைப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதேபோல் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் இணை அமைச்சரவைப் பேச்சாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Added a news
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளரான அருணி விஜேவர்தன இன்று (23) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அவர் 2022 மே 20 முதல் செயலாளராக நியமிக்கப்பட்டார்.கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து நடைபெற்ற வைபவத்தின் பின்னர், வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன அமைச்சின் பணி அதிகாரிகளிடம் உரையாற்றினார்.இலங்கை வெளிநாட்டு சேவையின் உறுப்பினரான, வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன, 34 வருடங்களாக வெளிநாட்டு சேவையில் ஈடுபட்டுள்ளதோடு, கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிலும், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களிலும், சர்வதேச நிறுவனங்களிலும் பல பதவிகளை வகித்துள்ளார். தனது வெளிநாட்டுப் பணிகளில், ஜெனிவாவில் உள்ள ஐ.நா. வுக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகம், மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், பிலிப்பைன்ஸில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். ஒஸ்ட்ரியாவுக்கான இலங்கைத் தூதுவராகவும், வியன்னாவில் உள்ள ஐ.நா. அமைப்புக்களுக்கான நிரந்தரப் பிரதிநிதியாகவும் அவர் மேலும் பணியாற்றியுள்ளார்.வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அங்கீகாரத்தின் பேரில், வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி முகவரமைப்பின் கொள்கை உருவாக்கும் உறுப்புக்களின் செயலகத்தின் பணிப்பாளராகவும் அருணி விஜேவர்தன பணியாற்றியுள்ளார்.
Added a news
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸ் தனது பதவியை இராஜினாமா செய்தற்கான கடிதத்தை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குற்றப்புலனாய்வு பிரிவில் சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய நிலையில் சற்றுமுன்னர் அவர் அங்கிருந்து வௌியேறியிருந்தார்.கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அவர் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
Added article
பிரான்ஸ் நாட்டில் தற்போது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டேவின் சூட்கேஸ் திருடு போய்விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பூஜா ஹெக்டே தனது சூட்கேசில் விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த மேக்கப் பொருட்களை வைத்து இருந்தால் அந்த சூட்கேஸ் மர்ம நபர்களால் திருடப்பட்டது.இதனை அடுத்து பூஜா ஹெக்டே மற்றும் உதவியாளர்கள் பதட்டத்தில் இருந்ததாக தெரிகிறது. கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்ற பூஜா ஹெக்டே மாற்று உடை கூட இல்லாமல் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் தங்க வைர நகைகளை அவர் சூட்கேஸில் வைக்காமல் கழுத்தில் அணிந்து இருந்ததால் அவை திருடு போகாமல் தப்பித்தது என்று பூஜா ஹெக்டே நிம்மதி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Added article
விஷால் நடித்த ‘லத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது ‘லத்தி’ திரைப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி சுதந்திர தின விடுமுறை தினத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே ஆகஸ்ட் 11-ஆம் தேதி விக்ரம் நடித்த ’கோப்ரா’ படம் ரிலீஸாக உள்ள நிலையில் விக்ரம் படத்துடன் மோத விஷால் முடிவு செய்துள்ளார். விஷால் ஜோடியாக சுனைனா நடித்துள்ள இந்த படத்தை நடிகர்கள் ராணா மற்றும் நந்தா தயாரித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்