Feed Item

இந்தியாவில் பிரபலமான உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஒன்று ஜொமேட்டோ. இந்நிறுவனம் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. 

தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்பவர் ஜொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவர் ஆர்டர் செய்த உணவு முழுவதுமாக கிடைக்காததால், ஜொமேட்டோ ஆப் மூலம் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு தனது பணத்தை திருப்பி அளிக்கும்படி கேட்டுள்ளார்.

அப்போது அவருக்கு பதில் அளித்த சேவை மைய அதிகாரி, நீங்கள் உணவு ஆர்டர் செய்த உணவகத்தை தொடர்பு கொண்டோம். ஆனால், மொழி பிரச்சனையால் எங்களால் இது தொடர்பாக பேச முடியவில்லை என பதிலளிக்கிறார். அதற்கு விகாஷ் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் தெரியாமல் இருந்தால் எப்படி. தமிழ் தெரிந்த ஒருவரை நியமிக்க வேண்டாமா? நீங்கள் உணவகத்தை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப பெற்று தாருங்கள் என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அதிகாரி தேசிய மொழி இந்தி. அதை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் சேவை மைய அதிகாரிக்கும், தனக்குமான உரையாடல்களை விகாஷ் டுவிட்டரில் அந்நிறுவனத்தை டேக் செய்து பதிவிட்டார். உடனடியாக சமூகவலைதளங்களில் ஜொமேட்டோ நிறுவனத்திற்கு எதிராக என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆனது.

இந்நிலையில்,தங்களது வாடிக்கையாளர் சேவை மைய ஊழியரின் நடவடிக்கைக்கு சொமேட்டோ நிறுவனம் வருத்தம் தெரிவித்து அவரை பணியிடம் நீக்கம் செய்து விட்டதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

  • 671