Feed Item
Added article  to  , SaaraKaattrae

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ள நிலையில் சமீபத்தில் அண்ணாத்த படத்தில் எஸ்.பி.பி பாடிய ஓப்பனிங் சாங் மற்றும்சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் இணைத்து பாடியுள்ள சாரக்காற்றே என்ற பாடல் டிரெண்டிங்கில் உள்ளது.இந்நிலையில், அண்ணாத்த படத்தின் டீசர் வரும் அக்டோபர் 14 ஆம் தேதி மாலை 6மணிக்கு ரிலீஸாகும் எனத் தகவல் வெளியாகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • 766