யாழ்ப்பாணம் - மல்லாகம் நீதிமன்றத்துக்கு அருகில் வைத்து அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் தமது சொந்த விருப்பத்துக்கமையவே அவரது பெற்றோருடன் சென்றதாக பொலிசாரிடம் அறிவித்துள்ளார்.
மல்லாகம் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் வழக்கு ஒன்றில் பிரசன்னமாகி, நீதிமன்றிலிருந்து வெளியேறியிருந்த குறித்த பெண் குழுவொன்றினால் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
அந்தப் பெண் கடத்தப்படும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று வெளியாகியிருந்த நிலையில், அதனடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெல்லிப்பளை பொலிசார் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், குறித்த யுவதி தமது சுய விருப்பத்துக்கமையவே தமது பெற்றோருடன் சென்றமை தெரியவந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
- 294