Feed Item
·
Added a news

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 50% வரி விதிக்க பரிந்துரைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அடுத்த மாதம் முதலாம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த புதிய வரி விதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவில் தயாரிக்கப்படாத ஐபோன்களுக்கு குறைந்தபட்சம் 25% இறக்குமதி வரி விதிக்கப்போவதாகவும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு நாடுகளிலோ உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படுமாயின் மாத்திரம் வரி விதிக்கப்படும் என அறிவித்த ட்ரம்ப் ஐபோன்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து உற்பத்தியை குறைத்து, இந்தியாவில் உற்பத்தியை விரிவாக்கி வருகிறது.

2025 ஆண்டு மார்ச் மாதம் வரை, இந்தியாவில் 22 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஐபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டன, இது கடந்த ஆண்டை விட 60% அதிகரிப்பாகும்.

ட்ரம்ப் உலகெங்கிலும் உள்ள நாடுகளின் மீது பல்வேறு வரிகளை விதித்துள்ளார். அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பானது பல உலகத் தலைவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

000

  • 303