Feed Item
·
Added a news

 கனடாவில் ரயில்களில் அநாகரீகமாக நடந்து கொண்ட நபர் ஒருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். கனடாவின் ஹால்டன் பிராந்தியத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரொறன்ரோ – ஹமில்டன் மற்றும் ரொறன்ரோ – புர்லிங்டன் ஆகிய இடங்களுக்கான ரயில்களில் பெண்கள் முன்னிலையில் குறித்த நபர் அநாகரீகமான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 7ம் மற்றும் 10ம் திகதிகளில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண்கள் முன்னிலையில் அந்தரங்க பாகங்களை காண்பித்ததாகவும், வேறும் தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபரின் புகைப்படங்களையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

  • 187