Feed Item
Added a post 

சில தவிர்க்க இயலாத சந்தர்ப்பத்திலோ, அல்லது தேவைக்கோ உறவினர்கள் அல்லது நண்பர்கள் வீட்டில் தங்க நேரிடலாம். அப்போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய சில நெறிமுறைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்.

1. உறவினர் வீடாகவோ அல்லது நண்பர் வீடாகவோ இருப்பினும் வெறும் கையை வீசிக் கொண்டு செல்லாமல், குழந்தைகளுக்கு பிஸ்கட் அல்லது முதியவர்கள் இருப்பின் பழங்கள் வாங்கிச் செல்ல வேண்டும்.

2. சரியாக சாப்பாடு நேரத்திற்கு செல்லாமல் முன்கூட்டியோ அல்லது சாப்பாடு நேரம் முடிந்த பின்னரோ செல்ல வேண்டும்.

3 அவர்கள் கொடுக்கும் சாப்பாட்டில் எந்தவித குறையும் சொல்லாமல், அவர்களே கேட்டாலும் நன்றாக உள்ளது என்று கூறுதல் வேண்டும்.

4. அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்துக் கொண்டு அவர்கள் வீட்டில் உள்ள பொருட்களை (டிவி, கம்ப்யூட்டர், லேப்டாப்) பயன்படுத்த கூடாது.

5. அந்த வீட்டின் படுக்கை அறையில் மிக சுதந்திரமாக நுழைந்து உறங்குதல் கூடாது.

6. அந்த வீட்டில் உள்ளவர்கள் பயன்படுத்திய, குளிக்கும் சோப்பை உபயோகித்தல் போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடக் கூடாது. இது அவர்களுக்கு அசௌகரியத்தைக் கொடுக்கும்.

7. அவர்கள் உபயோகப்படுத்தும் துண்டு (டவல்), சீப்பு போன்றவற்றை நாம் எடுத்து பயன்படுத்தக் கூடாது.

8. அவர்கள் வீட்டிற்கு செல்லும் வழி தெரியாவிட்டால், நாமே விசாரித்துக் கொண்டு போய்ச் சேர வேண்டுமே தவிர, அவர்களை வந்து கூட்டிச் செல்லுங்கள் என்று கூறக் கூடாது.

9. நாம் அந்த வீட்டிலிருந்து கிளம்பும் வரை அவர்களுக்கு எந்தவித அசௌகரியத்தையும் கொடுக்க கூடாது.

10. நம்முடன் குழந்தைகளையும் கூட்டி சென்றால் அவர்கள் அந்த வீட்டில் எந்த பொருளையும் எடுக்காமலும், தேவையின்றி எல்லாப் பொருள்களையும் நோண்டுவதையும் கண்டிக்க வேண்டும்.

  • 608