Feed Item
Added article 

சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்க உள்ள மூன்று படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. சிம்பு – ராம்குமார் பாலகிருஷ்னன் இயக்கத்தில் உருவாகும் அவரது 49 ஆவது படம் முதலில் தொடங்கவுள்ளது. ஆனால் இன்னும் படத்தின் திரைக்கதையை இயக்குனர் இறுதி செய்யாததால் படம் மே மாதத்தில்தான் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் சிம்புவுடன் சந்தானம் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளதாக் தகவல் வெளியானது. அதை இப்போது சிம்பு உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “சிம்பு திடீரென்று ஒருநாள் அழைத்து நான் பண்ணும் ஒரு படத்தில் நீங்களும் இருக்கவேண்டும் என்றார். என்னால் அவருக்கு எப்போதும் No சொல்ல முடியாது. எப்போதுமே அவரை நான் அப்படி ஒரு இடத்தில் வைத்துள்ளேன்.” எனக் கூறியுள்ளார். மேலும் அவர் “சிம்பு படத்தில் அவர்கள் கேட்ட தேதிகளில் நான் வேறொரு படத்தில் நடிப்பதாக இருந்தேன். அதன் பிறகு அந்த தயாரிப்பாளரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு சிம்புவோடு நடிக்கவுள்ளேன்” என சிம்பு மீதான நட்பை வெளிப்படுத்தியுள்ளார்.

  • 645