Feed Item
Added a post 

ஒருவன் வாழ்நாளில் முழு மனிதனாகவே வாழ்ந்தான் என்பதற்கு எதை அடையாளமாக வைப்பது என்பது குறித்த ஒரு சந்தேகம் ஒரு மன்னன் மனதில் எழுந்தது.

காட்டிற்குள் குடில் அமைத்து வாழ்ந்து கொண்டிருந்த ஒரு முனிவரிடம் சென்று தன் சந்தேகத்தை சொன்னான்.

முனிவர் சொன்னார்,

'ஒருவனின் மறைவிற்குப் பின்னே அந்த மறைவை தாங்க முடியாமல் ஒரு ஜீவன் கண்ணீர் வடிப்பது'

முனிவரின் பதில் மன்னனுக்கு புரியவில்லை. குழப்பமாய் கேட்டான்,

'ஒரு ஜீவன் என்றால்... யார் அந்த ஜீவன்? மனைவியா? மகனா? மகளா? அல்லது என் குடிமக்களில் ஒருவரா?'

முனிவர் பதிலளித்தார்,

'உன் மனைவி, மகன், மகள், குடிமக்கள் இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் உன்னோடு நேரடியாக தொடர்பு உள்ளவர்கள்.

உன் இழப்பை தாங்க முடியாமல் இவர்கள் அழுவதில் ஆச்சரியம் இல்லை.

ஆனால் எந்த வகையிலும் உனக்கு சம்பந்தம் இல்லாமல், உன் வீட்டிற்கு வலது காலை எடுத்து வைத்து மருமகளாக வாழ வந்த பெண்,

உன் இழப்பை நினைத்து வருந்தி கண்ணீர் விட்டு அழுதாள் என்றால்...

அவள் வாழ்க்கையில் உன்னை மாமனாராகப் பார்க்கவில்லை. தகப்பனாராகப் பார்த்துள்ளாள் என்று பொருள்.

கருணை உள்ள மனிதனால் மட்டும்தான் மருமகளை மகளாக நினைக்க முடியும்.

இதுவே நீ முழு மனிதனாக வாழ்ந்து முடித்திருக்கின்றாய் என்பதற்கான சாட்சி'

மன்னன் தெளிவடைந்தான்.

  • 217