ஒரு பேராசிரியையைப் பேச அழைத்தார்கள்
பேச்சின் தலைப்பாக "பலதார மணம்" என்பதை எடுத்துக் கொண்டு பல திருமணம் செய்து கொள்வதன் பலனை விளக்கினார்.
பல தார மணத்தை விரும்பும் கணவரை அவரது மனைவி புரிந்து கொள்ள வேண்டும்" எனச் சொன்னார்.
அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு பெண் எழுந்து
"மேடம் ! நீங்க இவ்வளவு நல்லவங்கன்னு எனக்குத் தெரியாமப் போச்சு. என் மனசுல இருந்த பாரம் இப்பதான் குறைஞ்சுது."
பேராசிரியர் பெருமையோடு
"நன்றி. இன்னும் ஏதேனும் சொல்றீங்களா..?" ன்னு கேட்டார்.
அந்தப் பெண் " ஆமாம் மேடம்...நான் உங்க கணவரைக் கல்யாணம் பண்ணி 5 வருஷம் ஆச்சு.
எங்களுக்கு இரண்டு இரட்டையர்கள்" என்றாள்
இதைக் கேட்டதும் பேராசிரியர் அதிர்ச்சியில் மூர்ச்சை ஆகி விழுந்து விட்டார்.!
அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று வைத்தியம் செய்ததும் கண் விழித்தார்.
பார்த்தால் அதே பெண் நின்று கொண்டிருந்தார்
" மேடம் ...மன்னிச்சுக்கங்க. உங்க கணவர் யார் எனத் தெரியாது.
நீங்க அறிவுரை சொல்வதை நீங்களே கடைபிடிக்கிறீர்களா எனத் தெரிந்து கொள்ள பொய் சொன்னேன்" என்றார்
பேராசிரியருக்கு வந்த பெருமூச்சு ஆசுவாசப்படுத்தியது.
- 273