இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். ஜாமீன் தொடர்பான விஷயங்களை தவிர்க்கவும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். கடின உழைப்பிற்கான பலன்கள் கைகூடும். சக ஊழியர்களின் இடத்தில் அனுசரித்து செல்லவும். ரகசியமான முதலீடுகள் அதிகரிக்கும். மற்றவர்களால் பொறுப்புகள் மேம்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
கல்வி தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்குப் பிடித்த செயல்களை செய்து முடிப்பீர்கள். நிர்வாகம் தொடர்பான பணிகளில் உடனிருப்பவர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கவும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை
மிதுனம்
உடன் இருப்பவர்களால் பொறுப்புக்கள் மேம்படும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். பிடிவாதமான போக்கினை குறைத்துக் கொள்ளவும். வியாபாரம் சார்ந்த இடமாற்றங்கள் சாதகமாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதில் பொறுமை வேண்டும். நம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கடகம்
புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உணவு சார்ந்த விஷயத்தில் கவனமாக இருக்கவும். வருவாயில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். புண்ணியத்தல தரிசன பயணம் சாதகமாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
சிம்மம்
பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சமூகம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான சுபவிரயங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கன்னி
புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். கால்நடைகளின் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தந்தையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தாமதம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம்
கனிவான பேச்சுகளால் மதிப்பு உயரும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சூழல் உண்டாகும். வியாபாரத்தில் திருப்பங்கள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். புதுவிதமான சில கனவுகள் பிறக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீலம்
தனுசு
அரசு சார்ந்த காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். நெருக்கமானவர்களின் சந்திப்பு உண்டாகும். கடன்களை தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபங்களை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மகரம்
தைரியமான சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். இழுபறியான சரக்குகளால் ஆதாயம் உண்டாகும். சிறு தூரப் பயணங்களால் மாற்றம் ஏற்படும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
கும்பம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். பழைய சிக்கல்கள் விலகும். வியாபாரம் சார்ந்த ரகசியங்களை புரிந்து கொள்வீர்கள். உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். அலுவலகம் பணிகளில் துரிதம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
வியாபாரத்தில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு வந்து செல்லும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படவும். சோதனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
- 386