Feed Item
Added a news 

அராலி இந்து அறநெறி சிறுவர் பாடசாலையில் சிறுவர் சந்தை நிகழ்வானது இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலையின் பொறுப்பாசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கல்பனா கலந்து சிறப்பித்தார்.

இதன்போது மாணவர்கள் பல்வேறு விதமான பொருட்களை சந்தைப்படுத்தினர். இந்த சந்தை நிகழ்வில் பெற்றோர், ஊர்மக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறுவர்களிடம் பொருட்களை வாங்கி அவர்களை உற்சாகப்படுத்தினர்.

சிறுவர்களின் ஆளுமையை விருத்தி செய்வதுடன் அவர்களை ஒரு மகிழ்ச்சியான சூழலுக்குள் கொண்டு செல்லும் நோக்குடன் இந்த சிறுவர் சந்தை நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

  • 687