Feed Item
Added a news 

ஜம்மு, காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக, பாகிஸ்தானுடன் இந்தியா இனி எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாது என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் நிலைப்பாடு காரணமாக இனிவரும் காலங்களில் பாகிஸ்தானுடன் இருதரப்பு போட்டிகளில் இனி இந்தியா விளையாடாது என அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி உயிர்களை இழந்த சம்பவத்தால், கிரிக்கெட் சமூகம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாகவும் , இந்த கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயலை கண்டிக்கும் அதே வேளையில், இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

000

  • 666