Feed Item
Added a news 

கல்கரியின் தென் மேற்குப் பகுதியில் உள்ள ஸ்ப்ரூஸ் ட்ரைவ் Spruce Drive S.W. எனும் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸார் தற்போது அந்தப் பகுதியில் விரிவான தேடுதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

ட்ரோன் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் கொண்டு சுற்றியுள்ள பகுதிகள் ஆய்வு செய்யப்படுகிறது. எச்சங்கள் மனித உடலானவைதான் என்பதும், இறப்பு சந்தேகத்திற்கிடமானதா என்பதும் உறுதி செய்யப்படவில்லை. அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

பொதுமக்கள் அந்தப் பகுதிக்கு செல்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

  • 671