Feed Item
Added a post 

மரக்காலை தலைக்கு வைத்து உலகுக்கு படியளந்த பெருமாள்.

இந்தியாவில் - தமிழ்நாட்டில் - தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆதனூர் என்னும் ஊரில் அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில் அமைந்துள்ளது.

கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

கோயிலின் சிறப்புகள்

இத்தல இறைவன் பள்ளிகொண்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

இவர் மரக்காலை தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணி, ஏடுடன் காட்சி தருகிறார். இதனை உலகுக்கு படியளந்த பெருமாள் ஓய்வாக பள்ளிகொண்டிருக்கும் கோலம் எனவும் அழைக்கின்றனர்.

கருவறையில் உள்ள பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன், தமது நாபிக்கமலத்தில் இருந்து பிரம்மா மேல் எழ, பள்ளிகொண்ட தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

இத்தலத்தில் காமதேனு, சுவாமியின் பாதத்திற்கு அருகில் அவரை வணங்கியபடி அருள்பாளிக்கிறாள்.பகிர்வு வேதசத்சங்கம்

இத்தலத்தில் கருவறைக்கு முன்புறம் உள்ள அர்த்தமண்டபத்தில் சுவாமியின் பாதம் உள்ளது.

பரமபதத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவிற்கு முன்புறம் இரண்டு தூண்கள் இருக்கும். அதை இரட்டைப்படை எண்ணிக்கையில் வலம் வந்து இந்த தூண்களை பிடித்துக்கொண்டு சுவாமியின் திருமுகம் மற்றும் திருப்பாதத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருமணமாகாதவர்கள் இத்தூண்களை தழுவி வணங்கினால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் பிரணவ விமானம் எனப்படும். இங்குள்ள ராஜகோபுரம் 3 நிலைகளைக் கொண்டது. காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது.

மகாவிஷ்ணுவை வேண்டி காமதேனு (ஆ) தவம் செய்த ஊர் என்பதால் இவ்வூர் 'ஆதனூர்" (ஆ, தன், ஊர்) என்று பெயர் பெற்றது.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 11வது திவ்ய தேசம் ஆகும்.

கருவறை விமானத்தில் 7 பூதகணங்களின் மத்தியில் வடக்கு பார்த்தபடி மகாவிஷ்ணுவின் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

image_transcoder.php?o=sys_images_editor&h=391&dpx=1&t=1745556002திருவிழாக்கள்

வைகாசியில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

பிரார்த்தனைகள்

கல்வியில் சிறக்கவும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.

இக்கோயிலில் பிரார்த்தனை செய்தால் திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை.

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் சுவாமிக்கு வஸ்திரம் சாற்றியும், விசேஷ நெய்வேத்தியம் படைத்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

  • 746