Feed Item
Added a post 

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உண்டாக்கும். பேச்சுக்களில் சற்று நிதானம் வேண்டும். நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். துணைவர்வழி உறவுகளால் அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். அரசு தொடர்பான காரியங்களில் அலைச்சல் ஏற்படும். வர்த்தகம் சார்ந்த முதலீடுகளில் கவனத்தோடு செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

ரிஷபம்

உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். சுப காரியங்களில் இருந்துவந்த மந்தநிலை விலகும். ஆடம்பரம் சார்ந்த பொருட்சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். கால்நடை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். நண்பர்களின் வருகை உண்டாகும். தன வரவுகளால் சேமிப்புகள் மேம்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மிதுனம்

வெளிவட்டாரத்தில் பழக்கங்கள் அதிகரிக்கும். உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளும் பயனுள்ளதாக இருக்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழிலில் மாற்றம் பிறக்கும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

கடகம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். புதிய நண்பர்களால் உற்சாகம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கள் அமையும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். ஆராய்ச்சி பணிகளில் மேன்மை ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

சிம்மம்

ஆடம்பரமான விஷயங்களால் சேமிப்புகள் குறையும். உடன்பிறப்புகளிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். ஆரோக்கியமற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களால் விரயம் உண்டாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கன்னி

உறவினர்கள் உங்களின் குணம் அறிந்து செயல்படுவார்கள். முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். நெருக்கடியாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். கலைத்துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

துலாம்

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கடியான சில விஷயங்கள் குறையும். பழக்க வழக்கங்களின் மூலம் மேன்மை அடைவீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

 

விருச்சிகம்

இலக்கியப் பணிகளில் மாற்றம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். மறைபொருள் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். இறை சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். செயல்பாடுகளில் சுதந்திரம் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

தனுசு

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். தாயுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் சாதகமாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வியில் சற்று கவனம் வேண்டும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம்

 

மகரம்

மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். சுப முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். திடீர் வரவுகளால் நெருக்கடிகள் குறையும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். தாமதம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

கும்பம்

இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் இடத்தில் பொறுமை வேண்டும். வரவுகளில் ஏற்றமான சூழல் அமையும். வாடிக்கையாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் உற்சாகம் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நட்புகள் மலரும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

மீனம்

குடும்பத்தின் பொறுப்புகள் அதிகரிக்கும். கால்களில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். வேலையாட்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் அளவுடன் செயல்படுவது நல்லது. சில பணிகளை திட்டமிட்டு மேற்கொள்வது நன்மையை தரும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீலம்

  • 621