Feed Item
Added a news 

ஜம்மு காஷ்மீரில் உள்ள பெஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்திய அரசு பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகளை அறிவித்தது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் இன்று இந்தியா தொடர்பான முக்கிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களும் இடைநிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. குறிப்பாக, 1972ஆம் ஆண்டு கையெழுத்தான சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து முக்கிய உடன்படிக்கைகளும் ரத்து என அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு மூடிவிட்டதாகவும், இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் வான்வெளியில் பறக்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் எண்ணிக்கையை 30-ஆக குறைக்கும் முடிவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 499