Feed Item
Added a post 

ஒரு Electricity Board Office, வெளியில் ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார்…

EB ஆபிஸர் : வாழைப்பழம் என்னப்பா விலை..?

வியாபாரி : சார் , இதை எதுக்கு நீங்க வாங்குறீங்கன்னு தெரிஞ்சா தான் சார் விலை செல்ல முடியும்…?

EB ஆபிஸர்: என்னப்பா சொல்ற, நான் எதுக்கு வாங்கினால் உனக்கு என்ன..?

வியாபாரி: இல்லை சார் , நீங்க இந்த வாழைபழத்த கோயிலுக்கு வாங்கினா விலை 10 ரூபா ஒரு பழம்.

குழந்தைகளுக்குனு வாங்கினா ஒரு பழம் 20 ரூபா. தெரிஞ்சவங்க வீட்டுக்கு வாங்குனா விலை 25 ரூபா. நீங்க சாப்பிட வாங்கினா ஒரு பழம் 30 ரூபா சார்…..

EB ஆபிஸர்: யோவ், யாரை ஏமாத்துற ஒரே பழம் எப்படியா different different விலைக்கு வரும்…?

வியாபாரி : இதுதான் என்னுடைய கட்டண விகிதம் (Tariff) சார்...

E.B ஆபீசர்: 😳😳😳😳

வியாபாரி: ஏன்டா கொய்யாலே…. நீங்க மட்டும் ஒரே கரண்ட், ஒரே Transmission சிஸ்டம் வச்சிகிட்டு வீட்டுக்கு தனி, கடைக்கு தனி, பேக்டரிக்கு தனி விலைனு விப்பீங்க….கேட்டா tariffனு சொல்லூவீங்க…

Banana vendor rocked and EB officer shocked.

  • 516