Feed Item
Added article 

76 வயதான எஸ்.வி சேகர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள மீனாட்சி சுந்தரம் என்ற தொடரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஷோபனா என்பவர் நடிக்கிறார். 76 வயது சேகருக்கு 26 வயது நடிகை ஜோடியாக நடிப்பதா? என வியப்பில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சீரியலின் முன்னோட்டக் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் எஸ்.வி.சேகருடன் நடிப்பது குறித்து நடிகை ஷோபனா கூறியதாவது: “எஸ். வி. சேகர் முதலில் யார் என்று எனக்கு தெரியாது. ‘ஜீன்ஸ்’ படத்தில் நடித்திருப்பார், அவரா? என்றுதான் நினைவுபடுத்தி கொண்டேன். அவரை எனது பாட்டிக்கு ரொம்ப பிடிக்குமாம். ஆனால் நான் என் பாட்டியையும் பார்த்ததில்லை. அதனால் அவரை பார்க்கும் போதெல்லாம் என் பாட்டி நினைவுக்கு வருவார். இதனால் அவரை நான் ஒரு ஏஞ்சல் போலவே பார்க்க ஆரம்பித்து விட்டேன்” என தெரிவித்துள்ளார்.

  • 156