Added a news
சீனா 10G இணைய சேவையை அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் ஹெபே மாகாணம், சுனான் மாவட்டத்தில் ஹுவாய் மற்றும் சீனா யூனிகோம் நிறுவனங்கள் இணைந்து, 50G PON தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 10G பிராட்பேண்டை செயல்படுத்தியுள்ளன. இதில் 9,800 Mbpsக்கும் அதிகமான டவுன்லோட் வேகம், 1,000 Mbps அப்லோட் வேகம் எனக் கூறப்படுகிறது. வெறும் 2 நொடிகளில் ஒரு திரைப்படத்தை டவுன்லோடு செய்ய முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இத்தகைய நவீன இணையம், 8K வீடியோக்கள், கிளவுட் கேமிங், ஏஐ உள்நிறைந்த ஸ்மார்ட் ஹோம்கள், தொலை மருத்துவம் போன்ற உயர்நுட்ப சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
- 184