Feed Item
Added a post 

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

உறவுகளிடத்தில் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில காரியங்கள் கைகூடும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பழைய வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

ரிஷபம்

ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். பழைய கடன் பாக்கிகளை கனிவாக பேசி வசூலிப்பீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். காப்பீடு வகைகளில் ஆதாயம் ஏற்படும். சபை தலைவராக இருப்பவர் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மிதுனம்

வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். பணி பொறுப்புகளால் உடல் அசதி ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்து கொள்ளவும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பதால் மனதில் அமைதி உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கடகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வருமானத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

சிம்மம்

சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். தன வருவாய் மேம்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் முன்னுரிமை ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை

 

கன்னி

உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கற்பனை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். பணியாளர்களால் லாபம் மேம்படும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

துலாம்

சுபகாரியம் கைகூடுவதற்கான சூழல் தோன்றும். சிந்தனையின் போக்கில் தெளிவு உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். உணவு துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சக ஊழியர்களால் மன அமைதி உண்டாகும். அரசு வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

விருச்சிகம்

செய்யும் செயல்களில் திருப்தியான சூழல் அமையும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவு அதிகரிக்கும். பாகப்பிரிவினையில் அனுகூலமான முடிவு கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் மறைமுகமான எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். திட்டமிட்ட பணிகள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

தனுசு

தம்பதிகளுக்கு இடையே புரிதல் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். வெளிவட்டாரத்தில் அனுபவம் மேம்படும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். உணவு செயல்களில் கவனம் வேண்டும். தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் சில மாற்றம் உண்டாகும். முதலீடு குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

மகரம்

உத்தியோகம் சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். வெளி உணவுகளை தவிர்க்கவும். புதிய முடிவுகளை எடுப்பதில் ஆலோசனை பெற்று செயல்படவும். பணியாட்களின் விஷயங்களில் நிதானத்தை கையாளவும். உடன்பிறந்தவர்களுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். மறதி சார்ந்த பிரச்சனைகளால் குழப்பங்கள் உண்டாகும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கும்பம்

நண்பர்களின் இடத்தில் வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் உழைப்பு அதிகரிக்கும். ஜாமீன் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். ரகசியமான சில முதலீடுகள் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

மீனம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பேச்சுக்களுக்கு மதிப்பு கிடைக்கும். இலக்கியப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். கற்பனைத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால வைப்பு நிதிகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். தடைப்பட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்

  • 327