உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்று ஏஐ டெக்னாலஜியை படித்து வந்தார் என்பதும், அவருடைய அடுத்த படத்தில் ஏஐ டெக்னாலஜி சம்பந்தமான காட்சிகள் வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழக அரசு சென்னை திருமயிலை பகுதியில் பிலிம் சிட்டி ஒன்றை கட்டப் போகும் நிலையில், அதற்காக அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதை அடுத்து, இந்த பணிகளை அவ்வப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
கட்டிடம் கட்டுவதற்கான தலைமை ஆலோசகராக கமல்ஹாசனை தமிழக அரசு நியமிக்க இருப்பதாகவும், அதற்காகத்தான் முதல்வர் மற்றும் துணை முதல்வர் அடிக்கடி கமல்ஹாசனை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் போல இந்த ஃபிலிம் சிட்டியை கட்ட இருப்பதால், கமல்ஹாசனை அமெரிக்காவுக்கு அனுப்பி அங்குள்ள கட்டிட மாடல்களை பார்த்து, அவருடைய ஆலோசனைப்படி இந்த கட்டடம் கட்ட வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, விரைவில் கமல்ஹாசன் தமிழக அரசின் சார்பில் அரசு செலவில் அமெரிக்கா சென்று புதிய பிலிம்சிட்டி கட்டிடத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 491