Feed Item
Added a post 

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். சில முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். சமூகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். வியாபாரத்தின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். தாமதம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

ரிஷபம்

வியாபாரம் சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். உத்தியோகத்தில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். துணைவர்வழி உடன்பிறப்புகளால் ஒத்துழைப்புகள் கிடைக்கும். முயற்சியில் இருந்துவந்த தடைகள் விலகும். வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். மனதளவில் இருந்துவந்த வருத்தம் நீங்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மிதுனம்

மற்றவர்களால் சில பொறுப்புகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். எந்தவொரு பணியையும் மற்றவர்களை சார்ந்திராமல் செய்து முடிப்பது நல்லது. முன் பின் தெரியாதவர்களிடம் கவனமாக இருக்கவும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். வாகனப் பயணங்களின்போது நிதானம் வேண்டும். மறதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

கடகம்

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். வெளியூர் பயணம் மூலம் அனுபவம் மேம்படும். தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். தந்தைவழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை

 

சிம்மம்

பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் சில உதவிகள் மூலம் குறையும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினரின் குணமறிந்து செயல்படவும். எண்ணிய செயல்கள் சில தடைகளுக்கு பின் முடிவடையும். அக்கம், பக்கத்தில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

கன்னி

நண்பர்களின் ஆலோசனைகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். சாமர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் மதிப்பு உயரும். வரவுகள் தேவைக்கு தகுந்த விதத்தில் இருக்கும். உடன்பிறப்புகள் சாதகமாக இருப்பார்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். மாமன் வழியில் அனுசரித்து செல்லவும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்

 

துலாம்

செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உறவுகளிடம் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். வாகனம் சார்ந்த பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் கிடைக்கும். எண்ணங்களில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

விருச்சிகம்

குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகை ஏற்படும். வியாபாரம் சார்ந்த பணிகளில் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த தயக்கங்கள் விலகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

தனுசு

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த பயணங்கள் அணுகூலமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இணையம் சார்ந்த வர்த்தகத்தில் கவனம் வேண்டும். மனம் விட்டு பேசுவதால் புரிதல் உண்டாகும். வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். வீட்டுத் தேவைகள் நிறைவேறும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல்

 

மகரம்

பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதிகரிக்கும். பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

 

கும்பம்

மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். போட்டி தேர்வுகளில் விவேகத்துடன் செயல்படவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். வாக்கு சாதுரியத்தின் மூலம் தடைப்பட்ட சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கோபம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

மீனம்

திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். பெற்றோர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். கமிஷன் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிறஇன மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

  • 479