Added a news
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத்தின் தலைவர் ஈலோன் மஸ்க்கிற்கும் இடையே தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இந்தியப் பிரதமர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவுடனான இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை முன்னேற்றுவதற்காக இந்தியா செயற்பட்டு வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அதேநேரம், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி.வோன்ஸ் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்குச் செல்லவுள்ள நிலையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
000
- 134