Feed Item
Added a post 

சூபி துறவியிடம் ஒரு நபர் 1000 பொற்காசுகள் கொண்ட பையை நீட்டி," எனக்கு சந்தோஷமாக எப்படி இருப்பது சொல்லுங்க,இந்த பையை உங்களுக்கு தருகிறேன் என்று சொன்னான்.

துறவி எதுவும பேசாமல் அந்த பையை அவனிடம் பிடுங்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தார்,

அவன் பதட்டமாக பின்னாடியே ஓடினான்

சிறிது தூரம் சென்ற பிறகு துறவி நின்று,அந்த பையை அவரிடமே கொடுத்தார்,"இது தான் சந்தோஷத்தை அடையும் வழி" என்று கூறினார்.

அவனுக்கு ஒன்றும் புரியல, துறவி விளக்க ஆரம்பித்தார்......

"இந்த பை உன்னிடம் தான் ஏற்கனவே இருந்தது,ஆனால் அப்போது நீ சந்தோஷமாக இல்லை,இப்போ சிறிது நேரம் உன்னிடம் இருந்து பறித்து கொண்டு மறுபடி கொடுத்தேன்,மீண்டும் சந்தோஷம் வந்து விட்டது,அப்போ என்ன அர்த்தம்?,

இது கிடைத்தால் தான் சந்தோஷம் என்று நீ ஒரு வரையறை வைக்கிறாய்..... பணம் வீடு வேலை என்று அது கிடைக்கும் வரை நீ சந்தோஷமாக இருப்பதே இல்லை,அந்த வரையறை என்பது நீயாக உனக்கு விதித்து கொண்டவை தானே?"

"ஒரு இலக்கை அடையும் பொருட்டு பாதை எங்கும் நீ சந்தோஷத்தை புறக்கணித்து செல்கிறாய்,அது தேவை தானா?"

"மொத்தத்தில் அந்த பை,(சந்தோஷம்) என்பது இயல்பாகவே உன்னிடம் இருப்பது தான்",என்று கூறி முடித்தார்.

  • 255