Feed Item
Added article 

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் தக் லைஃப். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தை கமல் ஹாசன், உதயநிதி ஸ்டாலின், சிவா ஆனந்த், ஆர் மகேந்திரன் ஆகிய பலர் தயாரித்துள்ளனர்.

ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 5ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தில் இடம் பெற்ற ஜிங்குச்சா என்ற பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியானது. இந்தப் பாடலுக்கு கமல் ஹாசன் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.

இந்த பாடல் கல்யாண நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட பாடல். இந்த நிலையில் தான் இப்பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல் ஹாசன், சிம்பு, மணிரத்னம், அபிராமி, அசோக் செல்வன், த்ரிஷா உள்பட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சிம்பு, கமல் சார் தான் தனது குரு என்றார். அவருடன் இணைந்து நடித்தது எனக்கு பெருமை. அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். கமல் ஹாசன் உடன் நடிப்பது ரொம்பவே கஷ்டம். அப்படியிருக்கும் போது மணிரத்னம் சார் வேறு இருக்கிறார். அப்போது எப்படி இருக்கும் பாருங்கள். இந்தப் படத்தில் கமல் சார் டான்ஸூம் ஆடி அசத்தியிருக்கிறார். அது என்ன பாடல் என்று படம் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும் என்பது போன்று பேசியிருந்தார்.

இதே போன்று கமல் ஹாசனும், சிம்பு பற்றி பேசியிருந்தார். அதில், சிம்பு இந்த படத்தில் பயங்கரமாக டான்ஸ் ஆடியிருப்பார். அவருடைய டான்ஸிற்கு ஈடு கொடுத்து ஆட வேண்டும் என்பதற்காக நானும் அப்படி டான்ஸ் ஆடினேன். பாசத்துல சிம்பு அவரது அப்பாவையே மிஞ்சிவிட்டார். சிம்புவின் அப்பாவிற்கு என் மீது பாசம் அதிகம். அதே போன்று தான் இப்போது சிம்புவும் தன் பாசத்தையும் அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்துகிறார். எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் டி ஆர் என் மீது சாய்ந்து அழுதுவிடுவார். அதில் என்னுடைய சட்டையே நனைந்துவிடும். இப்படி கமல் ஹாசன் பேசவே, சிம்பு சிரித்துக் கொண்டே இருந்தார்.

  • 463