Feed Item
Added a news 

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், விரைவில் தனது நாட்டின் குடிமகன்களுக்கான வருமான வரியை ரத்து செய்ய இருக்கும் அறிவிப்பை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா உள்பட வெளிநாடுகளில் இருந்து, அதிக வரி விதிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்காவுக்கு அதிக வருமானம் வரும் என்றும், இதன் காரணமாக உள்நாட்டில் உள்ள மக்களுக்கு வருமான வரி குறித்து விளக்கம் அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சீனாவுக்கு 245 சதவீதம் வரை அதிக வரி விதிக்கப்பட்ட நிலையில், இந்தியா உள்பட பல நாடுகளுக்கு 26 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். இந்நிலையில், அதிக வருமானம் வருவதால், வருமான வரி ரத்து செய்யப் போவதாக அவர் கூறியுள்ளார். 

ஆனால் அதே நேரத்தில், இதற்கு காங்கிரஸ் அனுமதி முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார். முற்றிலும் வரிமான வரியை நீக்கம் செய்யும் திட்டத்திற்கு அதிகாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

  • 515