Added article
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்து பெரும் புகழை சம்பாதித்தார்.
தற்போது பல முன்னணி இயக்குனர்கள் இந்துஜா அணுகி வருகிறார்கள். சமீபகாலமாக உடல் எடை அதிகமாகிக் காணப்பட்ட இந்துஜா இப்போது ஒல்லியான தோற்றத்துக்கு மாறி இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட அது கவனம் பெற்றுள்ளது.
தனுஷுடன் அவர் நடித்த ‘நானே வருவேன்’ படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தாலும் வணிக ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை.
இதையடுத்து அவர் வாய்ப்புகளைக் பெறுவதற்காக கவர்ச்சி ரூட்டுக்கு மாறி வருகிறார். தற்போது கிளாமர் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
- 683