Feed Item
Added a post 

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். தந்தைவழி உறவுகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துகொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். வியாபாரம் சார்ந்த பணிகளில் மந்தமான சூழ்நிலை ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் அமையும். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

ரிஷபம்

தொழில்ரீதியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கால்நடை வியாபாரத்தில் லாபம் மேம்படும். பிரபலமானவர்களுடைய ஆறுதலும், நட்பும் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சிரமம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

மிதுனம்

கலகலப்பான பேச்சுக்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். மனதை உருத்திய சில கவலைகள் விலகும். பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் குறையும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய்மாமன் வகையில் ஒத்துழைப்பு மேம்படும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

கடகம்

மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த சில காரியங்களில் போராடி வெற்றிப் பெறுவீர்கள். இலக்கிய பணிகளில் ஆர்வம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடன் பிறந்தோர்களின் ஆதரவுடன் சில செயல்களை செய்துமுடிப்பீர்கள். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

சிம்மம்

உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் விலகும். அரசு சார்ந்த காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். பழைய சிந்தனைகளால் மனதில் மகிழ்ச்சியற்ற சூழல் ஏற்படும். உடனிருப்பவரை அனுசரித்து செல்லவும். உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

கன்னி

செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். வருமானத்தில் ஏற்பட்டிருந்த தடை தாமதங்கள் விலகும். திட்டமிட்ட காரியத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை அமையும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

துலாம்

புதியநபரின் அறிமுகம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் மேம்படும். குடும்பத்தினரிடம் மனம்விட்டு பேசுவது புரிதலை ஏற்படுத்தும். கல்வி பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். கடன் நெருக்கடிகள் ஓரளவு குறையும். இறை வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளால் மாற்றம் பிறக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

விருச்சிகம்

எதிலும் படபடப்பு இன்றி பொறுமையுடன் செயல்படவும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். மற்றவர்களை எதிர்பார்க்காமல் உங்கள் பணிகளை நீங்களே மேற்கொள்வது நன்மை தரும். நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வது நல்லது. பெரியோர்களின் ஆலோசனைகள் சில மாற்றத்தை ஏற்படுத்தும். முக்கிய கோப்புகளை கையாளும் போது கவனம் வேண்டும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்வப்பு

 

தனுசு

தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். பணிபுரிபவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய செயல்களில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்

 

மகரம்

திடீர் வரவுகளால் சங்கடங்கள் நீங்கும். அரசு வழியில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். உணவு துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உழைப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

 

கும்பம்

வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வாதத் திறமையினால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். நண்பர்களிடம் அனுசரித்து செல்லவும். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

மீனம்

வெளியுலகத் தொடர்புகளில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். உயர் கல்வியிலிருந்த குழப்பங்கள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் சாதகமாகும். திட்டமிட்ட காரியங்களில் புதிய அனுபவம் ஏற்படும். பயண துறைகளில் விழிப்புணர்வு வேண்டும். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 572