வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் 'எங் மங் சங்'. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது.17ஆம் நூற்றாண்டில் நடப்பது போன்ற ஒரு கதை அமைப்பில் தொடங்கி, 1980 இல் நடக்கும் கதை, அப்போது அங்கு பிரபலமாக இருந்த குங்ஃபூ கலையை, இந்தியாவில் இருந்து செல்லும் மூன்று இளைஞர்கள் அந்த கலையை கற்று, எங் மங் சங் என்ற பெயரோடு தமிழ்நாட்டுக்கு திரும்புகிறார்கள். அங்கு கற்ற கலையை வைத்து இங்கு என்னென்ன செய்தார்கள் என்பதே இந்த படத்தின் திரைக்கதை.
வித்தியாசமான கதைக்களத்தில், நகைச்சுவை உணர்வோடு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் அர்ஜுன் எஸ் ஜே இயக்கி உள்ளார். இவர் தற்போது அஜித் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “ குட் பேட் அக்லீ “ படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்,
இப்படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் இயக்குனர் தங்கர் பச்சான், சித்ரா லட்சுமணன், கும்கி அஸ்வின், மாரிமுத்து, காளி வெங்கட், முனீஸ் காந்த், பாகுபலி பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படம்... ஒருவழியாக கோடையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படம் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது.
- 769