Feed Item
Added a news 

கன்சர்வேட்டிவ் கட்சி தொடர்பில் தனது நீண்டகால தேர்தல் ஆலோசகர் கோரி டெனெய்க் வெளியிட்ட கருத்துகளை முழுமையாக ஆதரிப்பதாகத் ஒண்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்தார்.

டெனெய்க், கனடாவின் கூட்டணி கட்சி (Conservative Party) தலைவரான பியர் பொய்லிவ்ரின் தேர்தல் இயந்திரத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அண்மையில் நடைபெற்ற கருத்துக்கணிப்புகளில் காணப்படும் விவரங்களை சுட்டிக்காட்டி, "பொய்லிவ்ரும் அவரது குழுவும், வாக்குகள் பெறும் வாய்ப்பை முற்றிலும் இழந்துவிட்டனர்," என்று சுட்டிக்காட்டியிருந்தார். கருத்துக் கணிப்பு முடிவுகளை சிலரினானால் ஏற்க முடியாது என்ற போதிலும் இதுவே யதார்த்தம் என டெனெய்க் சுட்டிக்காட்டியிருந்தார். தனது தேர்தல் பிரச்சார மேலாளர் டெனெய்க்கின் கருத்துக்கள் உண்மையானவை எனவும், கன்சர்வேட்டிவ் கட்சி உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டுமெனவும் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

  • 719