Feed Item
Added article 

1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க, பாம்பேவுக்குச் சென்று நடிகையைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

பட வேலைகள் துவங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், இயக்குநர் துரைமோகன் ஜோடியாக நடிக்க, நடிகையைத் தேடிக்கொண்டிருந்தது படக்குழு.

அந்த நேரம், இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை, ‘மதி ஒளி’ சண்முகத்திடம் தெரிவித்துள்ளார் பூர்ணிமா.

அவரும், பிரதாப் போத்தனுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிக்க பூர்ணிமாவை ஒப்பந்தம் செய்தார். படப்பிடிப்புக்காக சென்னையில் தங்க வேண்டியிருந்த நிலையில் வாடகை வீடு பார்க்கும்வரை பாம் குரோவ் ஓட்டலில் தங்கியிருந்தார் பூர்ணிமா.

இயக்குநர் சண்முகத்தின் தம்பி ‘மதி ஒளி’ செல்வம், நுங்கம்பாக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது மட்டுமல்லாமல் அவருக்கு PRO ஆகவும் பணிபுரிந்தார்.

அந்த சமயத்தில் பூர்ணிமா பாம்குரோவ் ஒட்டலில் தங்கியிருந்தபோது எடுத்த படம்தான் இது. (கருப்பு - வெள்ளையில் உள்ளது)

  • 574