Feed Item
Added article 

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கும் நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி மற்றும் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ‘மதராஸி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளுக்கு வரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் புதிய போஸ்டர் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்திருக்க மேலும் பிஜு மேனன், வித்யூத் ஜம்வால், , விக்ராந்த், ஷபீர் கல்லரைகல், பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் இந்த மெகா பஜெட் படத்தை சுமார் ₹200 கோடி செலவில் உருவாக்கி வருகிறது.

சமீபத்தில் வந்த ‘அமரன்’ திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பான வெற்றியைத் தந்தது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, 'மதராஸி' திரைப்படமும் வசூலில் கலக்கும் என ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்கள் பெரிதும் நம்புகின்றனர்.

  • 545